கடையில் புகை பிடித்த போது விபரீதம்:தீக்காயம் அடைந்த முதியவர் சாவு


கடையில் புகை பிடித்த போது விபரீதம்:தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
x

கடையில் புகை பிடித்த போது, தீக்காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்

சேலம் அரிசிபாளையம் பாவேந்தர் தெருவை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 61). இவர், லீபஜார் ரோட்டில் தெப்பக்குளம் அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த வாரம் அவர் கடையில் பீடியை புகைத்து விட்டு அதனை அணைக்காமல் படுத்து தூங்கிவிட்டார். அப்போது, பீடியில் இருந்த நெருப்பு சிவஞானம் போர்த்தி இருந்த போர்வையில் பட்டு தீப்பிடித்தது. இதனால் கடையும் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்தனர். இருப்பினும், முதியவர் சிவஞானத்தின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிவஞானம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story