வனப்பகுதியில் பிணமாக கிடந்த முதியவர்
காரையாறு வனப்பகுதியில் முதியவர் பிணமாக கிடந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றினார்.
பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்து போனவர் விக்கிரமசிங்கபுரம் காந்திபுரம் பகுதியைச் சார்ந்த சுடலை மாடன் (வயது 80) என்பது தெரியவந்தது. இதனை அறிந்து அவருடைய மகன் முருகன் மற்றும் மருமகன் பிரகாஷ் ஆகியோர் வந்து அடையாளம் காட்டினர்.
விசாரணையில், சுடலைமாடன் அடிக்கடி வெளியூர் சென்று விட்டு ஒரு வாரமோ அல்லது 4 நாட்களோ கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம் என்றும், அதுபோல் வெளியூர் சென்றிருப்பார் என குடும்பத்தார் நினைத்த நிலையில் அவர் காரையாறு வனப்பகுதியில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.