தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்


தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்
x

தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம் அடைந்தார்.

வேலூர்

ஒடுகத்தூரை அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்கப்பன் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (வயது 62) என்பவர் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். மாவட்டம் முழுவதும் தொடர் மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது. ஒடுகத்தூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் துரைசாமி வசித்து வந்த வீடு சரிந்து விழுந்தது. இதில் துரைசாமி காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று பல்வேறு பழமையான வீடுகளும் இடிந்து வருகிறது. சேதமடைந்த வீட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றார்கள்.


Next Story