முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த முதியவர் கடலில் மூழ்கி பலி
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த முதியவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த முதியவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் ஏராளமானோர் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முதியவர் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கரை ஒதுங்கினார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதியவர் கடலில் மூழ்கி பலி
உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் பலியான முதியவர் தோ வாளை பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (வயது 61) என்பதும், வெள்ளமடம் பகுதியில் தற்போது வசித்து வந்ததும் தெரிய வந்தது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த போது புனித நீராட கடலில் இறங்கிய லெட்சுமணன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.