ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது


ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது
x

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

மும்பை ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது போதையில் பயணம் செய்த முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார், ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அந்த பெட்டியில் இருந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த முதியவர் வேலூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 64) என தெரிய வந்தது. சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story