கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் மாரியாயி (வயது 80). இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லையாம். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிணற்றில் தவறி விழுந்து இறந்தது காணாமல்போன மாரியாயி என்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மாரியாயியின் உடலை மேலே கொண்டு வந்தனர். பின்னர் தோகைமலை போலீசார் மாரியாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.