மழைக்கு வீடு இடிந்து மூதாட்டி பலி
மழைக்கு வீடு இடிந்து மூதாட்டி பலியானார்
மதுரை
பேரையூர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அழகுரெட்டிபட்டி பகுதியில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்தது. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த சக்கரத்தாய் (வயது 80) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சக்கரத்தாய் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர். பேரையூர் தாலுகா எ.கோட்டைப்பட்டி உட்கடை கிராமம் அம்மாபட்டியில் பெய்த மழையின் காரணமாக பரமன் என்பவருடைய வீடு இடிந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story