திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி


திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
x

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை ஒரு மூதாட்டியின் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பழனி சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த ரங்கராஜ் மனைவி பொன்னுத்தாய் (வயது 72) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று போலீசார் கூறினர். இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story