சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு


சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் சந்திரகாசு மனைவி வைரம் (வயது70). இவருடைய மகன் ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (43). இவர் மயிலாடுதுறையை அடுத்த ஆனந்ததாண்டவபுரத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வைரம் கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சமைப்பதற்காக வைரம் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த வைரம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story