காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூதாட்டி கைது


காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூதாட்டி கைது
x

காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் டவுன் கௌதமபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் கௌதமபேட்டையை சேர்ந்த சிவகுமார் (வயது 48) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 1,680 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவகுமார் மற்றும் அவரது மனைவி ஸ்ரீவித்யா (42) ஆகியோரை போலீசார் கைது செய்து, 1,680 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மட்றப்பள்ளி ஊராட்சி தண்ணீர் பந்தல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை ெசய்தனர். காரில், அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனே கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (62) என்பதும், பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் ெதரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் கோவிந்தம்மானை கைது செய்து, காருடன் 960 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story