மின்மயானம் அமைக்க 52½ சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்த மூதாட்டி


மின்மயானம் அமைக்க 52½ சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்த மூதாட்டி
x

மின்மயானம் அமைக்க 52½ சென்ட் நிலத்தை மூதாட்டி ஒருவர் அரசுக்கு தானமாக கொடுத்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் மின்மயானம் அமைப்பதற்காக தொட்டியம்பட்டி ஊராட்சியில் 52½ சென்ட் நிலத்தினை அதன் உரிமையாளரான மூதாட்டி தேனம்மை, அரசுக்கு தானமாக வழங்கினார். இதற்கான பத்திரத்தை கலெக்டர் கவிதாராமுவிடம் நேற்று அவர் வழங்கினார். அவரை கலெக்டர் கவுரவித்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மூதாட்டி வழங்கிய அந்த இடத்தில் ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது.


Next Story