குளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மூதாட்டி


குளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மூதாட்டி
x

வந்தவாசியில் குளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மூதாட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் குளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மூதாட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.

குளத்தில் தவறி விழுந்தார்

வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி நாகம்மாள் (வயது 75). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் அவர் வீட்டுக்கு வராததால் கணவர், மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தில் பாசி படிந்த குளம் உள்ளது. நாகம்மாள் அந்த குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை.

இதனால் நாகம்மாள் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்து இரவு முழுவதும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உயிருடன் மீட்பு

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தின் அருகே சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது நாகம்மாள் மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பொதுமக்கள் குளத்தில் இறங்கி அவரை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குளத்தில் இரவு முழுவதும் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story