திறந்து கிடக்கும் மின்சாதன பெட்டி


திறந்து கிடக்கும் மின்சாதன பெட்டி
x

பொதக்குடியில் மின்சாதன பெட்டி திறந்து கிடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

பொதக்குடியில் மின்சாதன பெட்டி திறந்து கிடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்து கிடக்கும் மின்சாதன பெட்டி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் ஒவ்வொரு தெருக்களிலும், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரியவிடுவதற்கும், பின்னர் காலையில் நிறுத்துவதற்கும் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில், மின் சாதன பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மின் சாதன பெட்டி கதவு இல்லாமல் திறந்து கிடக்கிறது.

கதவு அமைக்க வேண்டும்

பள்ளி மாணவர்கள் மின்சாதன பொட்யை தொட்டால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை நேரங்களில் மின் சாதன பெட்டியில் மழைநீர் விழுந்து மின் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்சாதன பெட்டிக்கு கதவு அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story