காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை


காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2023 2:30 AM IST (Updated: 17 Jun 2023 6:47 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டியில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டியில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரடிப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி ராகுல் தங்கியிருந்த அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராகுல் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

போலீஸ் தேர்வில் தோல்வி

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராகுல், மதுரையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். அதேபோல் ராகுல் தமிழ்நாடு போலீஸ் பணிக்கு தயாராகி வந்தார். ஆனால் 3 முறை தேர்வு எழுதியும், அவற்றில் தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story