திண்டுக்கல் ராஜக்காபட்டி ஆனந்த சுவாமி குருபூஜை விழா
திண்டுக்கல் ராஜக்காபட்டியில் ஆனந்த சுவாமி குருபூஜை விழா நேற்று நடந்தது.
திண்டுக்கல் ராஜக்காபட்டியில் ஸ்ரீஆனந்த சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ஆனந்த சுவாமியின் 9-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணி அளவில் சிறப்பு யாக பூஜைகள் தொடங்கியது. இதில் விநாயகர், சுதர்சன், நாராயணன், மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபடும் வகையில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அதன்பிறகு ஆனந்த சுவாமியின் ஐம்பொன் மூலவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்கள் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் நகரின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், ராஜக்காபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன்-ராஜேஸ்வரி, எஸ்.கணேசன்-ஜெயசித்ரா, எஸ்.அசோக் பாண்டியன்-சுஜித்ரா, இஷாந்த்குமார்-சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.