ஆனையூர் ஊராட்சி மன்ற கூட்டம்
ஆனையூர் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் லயன் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து செயலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய தலைவர் லயன் லட்சுமிநாராயணன் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் அய்யம்பட்டியில் குளியல் தொட்டி கட்டவும், அண்ணாமலையார் காலனியில் சாலை பராமரிப்பு பணி செய்யவும், சிவானந்தம் நகரில் சாலை விரிவாக்கம் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story