பழங்கால சங்கு வளையல்கள் கிடைத்தன
அகழாய்வில் பழங்கால சங்கு வளையல்கள் கிடைத்தன
விருதுநகர்
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள ஒரு அகழாய்வு குழியில் தொடர்ந்து தோண்டியபோது சுடுமண்ணால் ஆன மணிகள், பழங்கால சங்கு வளையல்களின் பாகங்கள் கிடைத்தன. மேலும் மண்பாண்ட பொருட்களும் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
இதுவரை 2-ம் கட்ட அகழாய்வில் 3,280-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். முதல்கட்ட அகழாய்வில் 7 மாதங்களில் 3,254 பொருட்கள் கிடைத்தன. ஆனால் 2-ம் கட்ட அகழாய்வில் 4 மாதங்களில் மட்டும் 3,280 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 2-வது கட்ட அகழாய்வுக்கு இன்னும் குழிகள் தோண்டப்பட உள்ளதால் மேலும் அதிகமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story