ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும்


ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும்
x

ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அமைச்சர் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களை நகரசபை சேர்மன் தங்கம் ரவி கண்ணன், ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, ஆகியோர் வரவேற்றனர். கோவிலுக்கு சென்று அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

அவரிடம் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜாஆகியோர் ஆண்டாள் கோவிலின் சிறப்புகள் பற்றி கூறினர்.

திருமுக்குளம்

அதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளை சந்தித்து சேகர்பாபு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவில்களில் தேர்த்திருவிழாவின் போது எந்தவித உயிர் சேதமும் நடைபெறாத வண்ணம் அனைத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை சிறப்பாக்க தமிழக முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஜீயர் சுவாமிகள் பல்வேறு கோரிக்கைகள் கூறினர்.

அந்த கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story