அந்தியூர் பெரிய ஏரி நீர்மட்டம் 14 அடியாக உயர்வு


அந்தியூர் பெரிய ஏரி நீர்மட்டம்   14 அடியாக உயர்வு
x

பெரிய ஏரி

ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து ஏரிகளுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டு் வருகிறது.இதன் மூலம் பெரிய ஏரி நீர்மட்டம் உயர்ந்து தற்போது 14 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 16 அடியாகும். அதேபோல் 11.25 அடியுள்ள எண்ணமங்கலம் ஏரியில் 7.50 அடியும், 12 அடி உள்ள சந்தியபாளையம் ஏரியின் நீர்மட்டம் 10 அடியாகவும், 13 அடியுள்ள வேம்பத்தி ஏரியின் நீர்மட்டம் 7.50 அடியாகவும், 14.50 அடியாக உள்ள தண்ணீர் பள்ளம் ஏரி 13.50 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்தால் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story