அந்தியூர் பேரூராட்சி அலுவலககுடிநீர்தொட்டியில் 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது


அந்தியூர் பேரூராட்சி அலுவலககுடிநீர்தொட்டியில் 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
x

அந்தியூர் பேரூராட்சி அலுவலக குடிநீர்தொட்டியில் 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி பகுதியில் நேற்று திடீரென சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பேரூராட்சி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஏணி மூலம் குடிநீர் தொட்டியில் ஏறி நாகப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை சாக்குப்பையில் போட்டு கட்டி அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.


Next Story