காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்யும் ஆந்திர இளைஞர்


காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்யும் ஆந்திர இளைஞர்
x

பிளாஸ்டிக் மறுசுழறந்சி, பசுமை பாதுகாப்பு 2படமங்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள்பயணம் மேற்கொள்ளும் ஆந்திர வாலிபர் போளூர் வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

போளூர்

பிளாஸ்டிக் மறுசுழறந்சி, பசுமை பாதுகாப்பு 2படமங்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள்பயணம் மேற்கொள்ளும் ஆந்திர வாலிபர் போளூர் வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கு பயணம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரி நரசிம்மல்லு-- அஞ்சலிதேவி தம்பதி மகன் பாஞ்சாலா சைதன்யா (வயது 23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படித்து முடித்துள்ளார். சிறு வயது முதலே பயணம் மேற்கொள்வதை ஆர்வம் கொண்டு உள்ளார்.

இவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சைக்கிள் பயணத்தை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தொடங்கினார்.

கா6:மீரில் தொடங்கிய அவர் சைக்கிளில் பல்வேறு மாநிலங்கள் வழியாக போளூர் வந்தார். இதுவரை 4 ஆயிரத்து 230 கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். தினமும் 100 முதல் 120 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் பிரத்தியேகமாக நவீன சைக்கிள் உபயோகித்து வருகிறார்.

கின்னஸ் சாதனை பதிவிற்காக, எலக்ட்ரானிக் கையடக்க கருவி மூலம் தினமும் பயணம் செய்யும் தூரம், நேரம், காலம், ஆகியவை பதிவு செய்து பயணம் செய்து வருகிறார். பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்தும், பசுமை பாதுகாப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நெல்லூர் மதல் கன்னியாகுமரி வரை மே 16 முதல் ஜூன் 3 வரை பயணம் மேற்கொண்டு மரம் வளர்ப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தார்.

மேலும் ஜூன் 4 முதல் நெல்லூர் முதல் பாகிஸ்தான் எல்லை வைர 7 மாநிலங்களில் 70 நாட்களில் பயணம் மேற்கொண்டார். இதற்கு ஆந்திரா அரசின்' யூத் ஐகான் ' விருது வழங்கியது.

வரவேற்பு

போளூர் வந்த இவரை பைபாஸ் சாலையில் சமூக ஆர்வலர்கள் கோவர்த்தனம், தனபால், ராம்தாஸ், ஹேமநாதன், சந்துரு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்றனர். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

50,ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக பாஞ்சான்யாசைதன்யா தெரிவித்தார்.



Next Story