ஆண்டிப்பட்டியில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது
ஆண்டிப்பட்டியில் செல்போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தேனி
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் செல்போன் கடை ஒன்று உள்ளது. கடந்த 25-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இந்த கடையில் கதவின் பூட்டை உடைத்து அங்கிருந்த செல்போன், பென்டிரைவ், ஹெட்போன், செல்போன் உதிரிபாகங்கள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சரவணக்குமார் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடையில் திருடியது சக்கம்பட்டி சத்யா காலனி பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story