ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி


ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி
x

வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

வேலூர்

வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அனிமியா பூங்கா என்ற தலைப்பில் சமூக நலன், மகளிர் உரிமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் ரத்த சோகை தடுப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இளம் பருவத்தில் உண்ணவேண்டிய சத்தான காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.

இதில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்திபிரியதர்ஷினி, பள்ளி துணை தலைமை ஆசிரியை பிரேமகுமாரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் குணா, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்களுக்கு ரத்தசோகை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது


Next Story