சமுதாய நலப்பணியாளர்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு பயிற்சி


சமுதாய நலப்பணியாளர்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு பயிற்சி
x

சமுதாய நலப்பணியாளர்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய நல பணியாளர்களுக்கான ரத்தசோகை ஒழிப்பு பற்றிய ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடைபெற்றது. தா.பழூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது ரத்தசோகை நோய் தடுப்பது குறித்தும், பயன்படுத்த வேண்டிய ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்தும் பேசினார். வட்டார சுகாதார செவிலியர் விஜயராணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். இப்பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்தை சேர்ந்த சமுதாய நல பயிற்றுனர்கள் 19 பேர் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கில் இரும்பு சத்துள்ள தானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழ வகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. பயிற்சியின் முடிவில் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இப்ப பயிற்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story