ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்


ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்
x

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கிவைத்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வருகிற நவம்பர் 30-ந் தேதி வரை பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கதிர்ஆனந்த் எம்‌.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அமலு விஜயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60.9 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை உள்ளது. இந்த பிரசார வாகனத்தில் உண்ண வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story