ரத்த சோகை விழிப்புணர்வு வாகன பிரசாரம்
கே.வி.குப்பத்தில் ரத்த சோகை விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் ரத்த சோகை குறித்த வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மைதிலி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழுத் தலைவர் லோ.ரவிச்சந்திரன் கொடயசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பிரசார வாகனம் கே.வி. குப்பம், பி.கே.புரம், குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது. சுகாதார ஆய்வாளர்கள் செழியன், விமல், குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன், வட்டார திட்ட உதவியாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story