ரத்த சோகை விழிப்புணர்வு ஊர்வலம்


ரத்த சோகை விழிப்புணர்வு ஊர்வலம்
x

அரக்கோணத்தில் ரத்த சோகை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ரத்த சோகை வாகன விழிப்புணர்வு ஊர்வலம் அரக்கோணத்தில் நடைபெற்றது.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தான்யா, ஒன்றிய துணை தலைவர் புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மேலாளர் ஜெயவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story