மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம்


மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம்
x

ஆதியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், எல்.எஸ்.மருத்துவமனை, திருப்பத்தூர் டெட்ராசிஸ் லைப் சயின்ஸ் மற்றும் எச்.பி.சி. பார்மா இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறிதல் முகாம் ஆதியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கே.மணிவண்ணன் வரவேற்றார்.

முகாமை டாக்டர் லீலாசுப்ரமணியம் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் பேசினர்.

இதில் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏலகிரி செல்வம், பி.கணேஷ்மல், வி.கே.ஆனந்த், டி.வெங்கடேசன், ஆர்.ஆர்.மனோகரன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் என்.சங்கர் நன்றி கூறினார்.


Next Story