சேதமடைந்த ரேஷன் கடையில் செயல்படும் அங்கன்வாடி மையம்


சேதமடைந்த ரேஷன் கடையில் செயல்படும் அங்கன்வாடி மையம்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:45 AM IST (Updated: 13 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கட்டிட பணி தொய்வால் சேதமடைந்த ரேஷன் கடையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட்டிடம் சிதலமடைந்தது. தொடர்ந்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் 3 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி முடிவடையாமல் தொய்வடைந்து வருகிறது.

இதனால் அருகில் உள்ள பழைய ரேஷன் கடை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story