சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் அங்கன்வாடி மையம்


சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் அங்கன்வாடி மையம்
x

பழையனூரில் சுகாதாரமற்ற நிலையில் அங்கன்வாடி மையம் செயல்படுவதாகவும், குழந்தைகள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையனூர் ஊராட்சி. சுற்றுவட்டார பகுதியில் மிகப்பெரிய கிராமமாக விளங்கும் இங்கு வடக்கு தெரு, கிழக்குத் தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் இருக்கும் இடம் மிகவும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் கால்நடைகளும் கழிவுநீர்களும் அதிகளவில் தேங்கி நிற்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் அவ்வப்போது மழைநீரோடு கழிவுநீரும் அதிகளவில் அங்கன்வாடி மையம் அருகில் தேங்கி நிற்கிறது.

மேலும் அங்கன்வாடிமுன்பகுதியில் கழிவுகளும் அதிகளவில் கொட்டப்படுவதால் குழந்தைகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கழிவுநீர் மட்டுமல்லாமல் கால்நடைகளை அகற்றி அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story