அங்கன்வாடி மையத்திற்கு செல்ல நடைபாதை வேண்டும்
அங்கன்வாடி மையத்திற்கு செல்ல நடைபாதை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு எடத்தால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கு மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் மேடான பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மையத்துக்கு செல்லும் நடைபாதை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் குழந்தைகள் தவறி விழுவதால் காயம் ஏற்படுகிறது. மழை காலங்களில் வழுக்கி கீழே விழுகின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல நடைபாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, கான்கிரீட் நடைபாதை அமைப்பதோடு, அங்கன்வாடி மையத்தை சுற்றி சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story