குழந்தைகளை வெளியேற்றி அங்கன்வாடி மையத்தை மூடியதால் பரபரப்பு
கிள்ளை அருகே குழந்தைகளை வெளியேற்றி அங்கன்வாடி மையத்தை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
பரங்கிப்பேட்டை:
கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம், மழைக்காலத்தில் ஒழுகியது. எனவே அங்கன்வாடி மையம், அதே கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு நடுநிலைப்பள்ளி சமையலர் ஒருவர், அந்த குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்ட சமுதாய நலக்கூடத்தை இழுத்து மூடினார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் குழந்தைகள், அருகில் உள்ள வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். இது பற்றி அறிந்ததும் தாசில்தார் ஹரிதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், பழைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தை நடத்தவும், மழைக்காலத்தில் மாற்று இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுத்தவும் கூறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story