ஆதியூர் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடக்கம்
ஆதியூர் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
ஆதியூர் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.
கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சி தங்கபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் ரூ12 லட்சத்தில் புதிய கட்டிட பணிகள் பூமி பூஜையுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார்.
பூமி பூஜையை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story