அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் ராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அங்கன்வாடியில் உணவு சமைப்பதற்குரிய சிலிண்டர்களுக்கான முழு தொகையை அரசே வழங்க வேண்டும். அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களை நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். 1995-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். உணவு செலவிற்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story