ரூ.52 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி, சுகாதார வளாக கட்டிடம்
ரூ.52 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி, சுகாதார வளாக கட்டிடம்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுகாதார வளாகங்கள், அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டில் வெண்ணாற்றங்கரை ஆனந்தவள்ளியம்மன் கோவில் தெருவில் ரூ.36 லட்சம் செலவில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதே போல் பள்ளியக்ரகாரம் பெரியதெரு பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது.இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு பரிசினையும் வழங்கினார். அதனைத்தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டார். மொத்தம் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ஆனந்தி, கவுன்சிலர் செந்தமிழ்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.