அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு


அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு
x

கோவில்பட்டியில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க 3-வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முத்தாண்ட ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், கந்தையா, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் அல்போன்ஸ் லிகோரி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அந்தோணியம்மாள், மாவட்ட பொருளாளர் ராமு ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். சங்க பொதுச்செயலாளர் மாயமலை, மாநில துணைத்தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

மாநாட்டில், தமிழக சமூக நலத்துறையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் 40 ஆண்டுகால அரசு பணியை கணக்கில் கொண்டு, சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் என்ற பெயரை மாற்றி, சட்டப்படியான முறையான ஓய்வூதியம் என அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திட வேண்டும். 40 ஆண்டுகள் மிகக்குறைந்த ஊதியம், அதனால் தொடரும் வறுமை நிலையில் உள்ள ஓய்வூதியர்களின் நிலையை கணக்கில் கொண்டு ஈமக்கிரியை செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் கல்வித்தகுதி மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அரசு காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சுலோச்சனா நன்றி கூறினார்.


Next Story