அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் ஓய்வுபெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். பணி காலத்தின் போது பெற்று வந்த மருத்துவப்படி அகவிலைப்படி, மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை ஓய்வு பெற்றபின்னரும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story