பரங்கிப்பேட்டையில்சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டையில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜாராமன், மோகன், குமார், பாலகிருஷ்ணன், இளங்கோவன், செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
தமிழக அரசு ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் குணா, ஒன்றிய பொருளாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story