கோவில்பட்டயில் சத்துணவு, அங்கன்வாடிஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டயில் சத்துணவு, அங்கன்வாடிஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டயில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோவில்பட்டி கிளை சார்பில் பயணியர் விடுதி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க இணை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஓய்வூதியர் சங்க வட்டாரத் தலைவர் தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி, கூட்டமைப்புமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், மாநிலத் துணைத் தலைவர் கனகவேல், வட்டார பொருளாளர் ரெஜினா மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story