அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மாலை மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தஹஜிம்பானு தலைமை தாங்கினார்.
இதில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
உடனடினயாக காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்.
பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களை போல் மகப்பேறு விடுப்பு 1 ஆண்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.