அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராணி தலைமை தாங்கினார். செயலாளர் பழனியம்மாள், பொருளாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி மையங்களுக்கு மின்கட்டணம் அரசே செலுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story