அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி,
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட சங்க தலைவர் கவிதா தலைமை தாங்கினார். போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதில் செயலாளர் சசிகலா, பொருளாளர் சந்திரலேகா, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. தாலுகா தலைவர் சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story