அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மா கோரிக்கைகள் குறித்து பேசினார். அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அதற்கு முன்பாக உள்ளூர் இடம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story