குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்:மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது
குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்து மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு பெரியவலசு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. தறிபட்டறை தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரியா பிரிந்து வந்து குழந்தைகளுடன் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார், பிரியா வசித்து வரும் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால், செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்தரிக்கோலால் பிரியாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்தினார். பிரியா வலியால் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த பிரியாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.