காதல் விவகாரத்தை தந்தையிடம் கூறியதால் ஆத்திரம்... நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் செய்த சம்பவம்...
காதல் விவகாரத்தை தந்தையிடம் கூறியதால் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே கார் டிரைவரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில், கடந்த 27-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் காதலித்து வந்ததாகவும், அதனை சரவணன், அஸ்வினின் தந்தையிடம் கூறியதால், ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story