மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 37), விவசாயி. இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு லிங்கேஷ் (9), இனியா (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். செல்வம் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக பிரியா கடந்த ஆண்டு தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த செல்வம் பூச்சி மருந்து(விஷம்) குடித்து வயலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.