நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா


நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா
x

திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 108 திவ்ய தேசங்களில் 49-வது திருத்தலமாக ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீசெங்கமல தாயார் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது.

கொடியேற்றம்

பின்னர் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. மேளதாளத்துடன், வேதமந்திரங்கள் முழங்க கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடியேற்றம் நிறைவு பெற்றவுடன் ஊஞ்சல் மண்டபத்தில் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் - ஸ்ரீசெங்கமலதாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோட்டம்

நிகழ்ச்சியில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story