நாராயண சுவாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்


நாராயண சுவாமி கோவில்  ஆனி திருவிழா தேரோட்டம்
x

களக்காடு அருகே சிதம்பரபுரம்நாராயண சுவாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் 93-வது ஆனி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

8-ம் நாளில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. 9-ம் நாளில் அய்யா நாராயணசுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். 11-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடந்தது. தொடர்ந்து தேேராட்டம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story