ஆனி பெருந்திருவிழா: சாந்தநாத சாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது


சாந்தநாத சாமி கோவிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் நேற்று காலை கொடியேற்றப்பட்டது. மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் சாமி புறப்பாடு நடைபெறும். விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.


Next Story