மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடந்தது.
திருச்சி
தொட்டியம்:
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் தொட்டியம் முடக்கு சாலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி பால்குடம், சந்தன குடம், இளநீர் காவடி, மயில் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், குழந்தைகளை கரும்பு தொட்டில் கட்டி தூக்கி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழாவையொட்டி தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story